அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை...! தமிழகத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை...!
Thunderstorms and rain next few days Due low pressure area Tamil Nadu heavy rain expected various districts
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழையின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், செப்டம்பர் 15-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 16-ந்தேதியும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,"தெற்கு உள் கர்நாடகாவில் இருந்து மன்னார் வளைகுடா வரை தமிழகத்தின் வழியாக நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து நிலவி வருகிறது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை பரவியுள்ளது.இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

இன்று பல மாவட்டங்களில் மிதமான மழை
செப்டம்பர் 12-ந்தேதி தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
செப்டம்பர் 13-ந்தேதி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
14-ந்தேதி 15 மாவட்டங்களில் மழை
செப்டம்பர் 14-ந்தேதி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
15-ந்தேதி நீலகிரியில் கனமழை
செப்டம்பர் 15-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.அதே நாளில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-ந்தேதி 2 மாவட்டங்களில் கனமழை
செப்டம்பர் 16-ந்தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும், தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் சூழல் நிலவுவதால், மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பயணம் மேற்கொள்பவர்கள் வானிலை நிலவரத்தை கவனித்து செயல்படுவது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Thunderstorms and rain next few days Due low pressure area Tamil Nadu heavy rain expected various districts