சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ரெய்னா செயல்படமாட்டார்'; காசி விஸ்வநாதன் சொல்வது என்ன..?
Kashi Viswanathan explains that Raina will not act as CSKs fielding coach
உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல் போட்டியின் 19-வது சீசன் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட 05 மாநிலங்களில் சட்டமன்ற தர்தல் நடைபெறவுள்ளதால் இன்னும் போட்டிக்கான அட்டவணை வெளியாகவில்லை.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட 20 போட்டிகளுக்கான அட்டவணை இன்று இரவுக்குள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியின்ப சொந்த மைதானமாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் ஆர்.சி.பி. - சி.எஸ்.கே அணிகள் மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில், சிஎஸ்கேவின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளார் என இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
ஆனால், இதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன், "சிஎஸ்கேவின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளார் என பரவும் தகவலில் உண்மையில்லை. எங்களது பயிற்சியாளர்கள் குழுவில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Kashi Viswanathan explains that Raina will not act as CSKs fielding coach