காசாவுக்கு குரல் கொடுத்தவர்கள், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கொல்லப்படும் போது எங்கே போனார்கள்..? காங்கிரசுக்கு கேரள பா.ஜ.க. கேள்வி..!
The Kerala BJP questioned the Congress asking where those who spoke up for Gaza were when Hindus were being killed in Bangladesh
வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலையில் அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. பின்னர் வன்முறையாக மாறியதில் பலர் கொல்லப்பட்டனர். இந்த கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைவராக இருந்தவர்களில் ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது 32) என்பவர், இங்குலாப் மாஞ்சா என்ற அமைப்பை நிறுவி அரசியலில் ஈடுபட்டார். அனால் கடந்த மாதம் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு, சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதன் தொடர்ச்சியாக அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் சிறுபான்மை சமூகத்தினராக வசிக்கும் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 03 வாரங்களில் 06 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலரது வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இதில், 03 இந்து தொழிலதிபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அவர்களிடையே அச்சமும், பாதுகாப்பின்மையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கேரள பா.ஜ.க.வில் மூத்த தலைவராக உள்ள கும்மனம் ராஜசேகரன் இன்று காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகளை கடுமையாக சாடி பேசியுள்ளார். வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கொடுமைகளை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பது பற்றி வேதனை வெளியிட்டதுடன், அனைத்து மனித உரிமை அமைப்புகளும் மற்றும் இந்த விசயத்தில் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதாவது, வங்கதேசத்தில் நாளுக்கு நாள் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. காசாவில் இஸ்ரேல் தாக்குதலின் போது, கம்யூனிசத்துடன் தொடர்புடையவர்கள், காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகள் முன்வந்து எதிர்வினையாற்றின.

ஆனால், வங்கதேசத்தில் வன்முறை விவகாரத்தில் அவை ஏன் மௌனம் காக்கின்றன.. என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அம்னெஸ்டி போன்ற சர்வதேச அமைப்புகளும் அமைதியாக உள்ளன. ஏன் வங்கதேசத்திற்கு ஏதேனும் ஒரு பிரதிநிதியை அனுப்பி வைக்க கூடாது..? என விமர்சித்துள்ளார்.
பொதுவாகவே, இந்துக்கள் கொடுமைப்படுத்தும் போது, இதுபோன்ற வளர்ந்து வரும் அமைப்புகள் உள்நோக்கத்துடன் அமைதி காக்கின்றன என்றும், இதுபோன்ற கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு அனைத்து வகை உதவிகளையும் அவர்கள் செய்கின்றார்கள் என குற்றச்சாட்டியுள்ளார்.
இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை, அனைத்து மனித உரிமை அமைப்புகளும் மற்றும் இந்து அமைப்புகளும் இந்த விசயத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டு அவர்களை ஒழிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
The Kerala BJP questioned the Congress asking where those who spoke up for Gaza were when Hindus were being killed in Bangladesh