ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..!
Case registered against Shah Rukh Khan and Deepika Padukone under Consumer Protection Act
பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் மீது ராஜஸ்தானின் பாரத்பூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்களுடன் ஹூண்டாய் நிறுவனத்தின் 06 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் வாங்கிய காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி, ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அதன் பிராண்ட் தூதர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது இந்தியாவின் 2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது பொருட்களின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றுமன்றி அதனை விளம்பரப்படுத்தும் பிராண்ட் தூதர்களும், தவறான அல்லது குறைபாடான பொருள்களை விளம்பரப்படுத்தினால் அவர்களும் இதில் பொறுப்பேற்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. அதன்படி, ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Case registered against Shah Rukh Khan and Deepika Padukone under Consumer Protection Act