மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்: வயநாடு தாமரைச்சேரியில் இரவு நிலச்சரிவு: வாகன போக்குவரத்துக்கு தடை விதிப்பு..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தாமரைச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மற்றும் வயநாடு பகுதிகளிலிருந்து கோழிக்கோடு செல்வதற்கு தாமரைச்சேரி மலைப்பாதை வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட காட்சி முனை உள்ளது.

இந்த பகுதியில் இன்று மாலை லேசான மழை பெய்துள்ள நிலையில், திடீரெனஇன்று இரவு 07:30 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் அதன் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட முடியாது. இதனால் இந்த பகுதியில் மக்கள் நடந்து செல்லவோ, வாகன போக்குவரத்தில் ஈடுபடவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வயநாடு மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ச்சியாக மண் சரிவு ஏற்படுவதால் மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, வயநாடு பகுதிகளிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் குட்டியடி, மானந்தவாடி மற்றும் நீலகிரி நாடுகாணி, நிலம்பூர் சாலையை மாற்றாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவின் போது ஏற்பட்ட இழப்புகள் உலக மக்களையே சோகத்தில் ஆழ்த்தியது. தற்போதும் அதே மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சம்பவம் மீண்டும் பீதியை ஏற்டுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vehicular traffic banned due to landslide at night in Thamaraicherry Wayanad


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->