ஒரே பந்தில் 13 ரன்கள் பறக்கவிட்ட சஞ்சு சாம்சன்: கேரள கிரிக்கெட் லீக் தொடரில் அதிரடி ஆட்டம்: வீடியோ உள்ளே..!
Sanju Samson scored 13 runs in one ball
கேரள கிரிக்கெட் லீக் தொடர் போட்டியில் சஞ்சு சாம்சன் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் 02 போட்டிகளில் நம்பர் 06 வரிசையில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்நிலையில் 03-வது போட்டியில் களமிறங்கிய சஞ்சு, சதம் விளாசியுள்ளார். அத்துடன், இன்று நடந்த 04-வது போட்டியில் போட்டியில் 46 பந்துகளில் 09 சிக்ஸ், 04 பவுண்டரி என 89 ரன்களை குவித்தார்.
இறுதியில் 5-வது ஓவரில் சிஜோமோன் ஜோசப் வீசிய 1 பந்தில் 13 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். ஜோசப் வீசிய நோ-பாலால் இந்த சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதன் மூலமாக சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்பி விட்டதாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஆசியக் கோப்பை டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் 90 சதவீதம் சந்தேகம் தான்.
காரணம் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், பிளேயிங் லெவனில் நிச்சயம் அவர் களமிறங்குவார்.
ஏனெனில், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் இடது - வலது கூட்டணியை விரும்புபவர். இதனால் சுப்மன் கில் - அபிஷேக் சர்மா கூட்டணியை அவர் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
இதனால் சஞ்சு சாம்சன் விளையாடுவாரா என்பது கேள்வி குறியாகியுள்ள நிலையில் அவர், மிடில் ஆர்டருக்கு கொண்டு செல்லப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Sanju Samson scored 13 runs in one ball