ஹமாஸ் படையினரின் 2 நிலத்தடி சுரங்கப் பாதையை அகற்றிய இஸ்ரேல்;10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிப்பு: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்..!
Israel dismantles 2 Hamas tunnels
காசாவில் ஹமாஸ் படையினரின் இரண்டு நிலத்தடி சுரங்கப்பாதையை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து அகற்றியுள்ளனர். இருந்து ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகின்ற நிலையில் குறித்த போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்ற நிலையில், அனைத்து பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனிடையே காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை வீட்டுக்கு திரும்பி அழைத்து வரும் வரை போர் தொடரும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக.அறிவித்துள்ளார். இந்த சூழலில் காசாவில் ஹமாஸ் படையினரின் இரண்டு நிலத்தடி சுரங்கப்பாதையை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அகற்றியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் பகிர்ந்துள்ளதோடு, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், எங்கள் பாதுகாப்பு படையினர் காசாவில் ஹமாஸ் படையினரின் இரண்டு நிலத்தடி சுரங்கப் பாதைகளை அகற்றியுள்ளதாகவும், ஒன்றில், ஆயுதங்கள், உணவு மற்றும் குடியிருப்புகள் கூட இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், அது கான்கிரீட்டால் நிரந்தரமாக மூடப்பட்டிருந்ததாகவும், மற்றொன்று நூற்றுக்கணக்கான மீட்டர் தொலைவில் நிலத்தடியில் இருந்த சுரங்கப்பாதை அப்புறப்படுத்தப்பட்டதாகவும், இந்த நடவடிக்கையின் போது, 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிக்கப்பட்ட்டுள்ளதாகவும், மேலும் அங்கு பயங்கரவாத உள்கட்டமைப்பு அனைத்தும் அகற்றப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Israel dismantles 2 Hamas tunnels