'பணி ஓய்வுக்கு பின் வேறு எந்த அரசு பதவிகளை ஏற்க மாட்டேன்': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அறிவிப்பு; குவியும் பாராட்டு..!
Supreme Court Chief Justice PR Kawai announces that he will not accept any other government positions after retirement
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எந்தவொரு அரசுப் பதவியையும் ஏற்க மாட்டேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர் போன்ற அரசுப் பதவிகளை அல்லது ஆணையங்களின் தலைவர் பதவிகளையோ ஏற்பது, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்த விவாதங்களை தொடர்ந்து எழுப்பி வருகிறது. இந்நிலையில், பி.ஆர்.கவாய் இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமாரின் பிரிவு உபசார விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், கலந்து கொண்டு பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: தான் ஓய்வு பெற்ற பிறகு எந்தவொரு அரசுப் பதவியையும் ஏற்க மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது தந்தை ஒரு அரசியல்வாதியாக இருந்து ஆளுநராகப் பணியாற்றியவராக இருந்தாலும், அவர் நீதித்துறையைத் தேர்ந்தெடுததாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவருடைய மனசாட்சியின்படி, நீதித்துறைக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பேன் என்றும், தனது ஓய்வுக்கு பின்னர் தனக்கு அதிக நேரம் கிடைக்கும். அப்போது மகாராஷ்டிரா மாநிலம் தாராபூர், அமராவதி மற்றும் நாக்பூரில் அதிக நேரம் செலவிட முயற்சிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி கவாயின் இந்த அறிவிப்பு, சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீதித்துறையின் மாண்பையும், சுதந்திரத்தையும் நிலைநிறுத்தும் நேர்மறையான நடவடிக்கை என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
English Summary
Supreme Court Chief Justice PR Kawai announces that he will not accept any other government positions after retirement