சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் - தமிழக முதல்வர் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களை மீட்க கடந்த 17 நாளாக மீட்புப் பணி நடந்து வந்த நிலையில் மீட்புப் பணி நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

"உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிக்கிறது.

மீட்புப் பணியில் அயராது உழைத்த துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

stalin wishes for rescue 41 worrkers in tunnel


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->