இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ஊதிய உயர்வு.. எங்கு தெரியுமா.?
Sikkim govt announce 2 more baby job promotion
சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை வெறும் 7 லட்சம் மட்டுமே ஆகும். இதுதான் நாட்டிலேயே மிகவும் மக்கள் தொகை குறைவு கொண்ட மாநிலம் ஆகும். மேலும் சிக்கிம் மாநிலத்தில் பிறப்பு விகிதம் 1.1 சதவீதமாக உள்ளது.
இதனையடுத்து சிக்கிம் மாநிலத்தின் பூர்வக்குடி சமூகங்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பது குறித்து சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமங் கவலை தெரிவித்தார். மேலும் குழந்தை பிறப்பு அதிகரிக்க ஊதிய உயர்வு அளிக்கப்படுவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் மேல் வைத்துள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 2 குழந்தைகள் வைத்திருந்தால் முன்பணம் பெறலாம் எனவும் 3 குழந்தைகள் வைத்திருந்தால் கூடுதல் ஊதிய உயர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கணவன், மனைவி இருவருமே அரசு ஊழியர்களாக இருந்தால் ஒருவர் மட்டுமே ஊதிய உயர்வு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் குழந்தையை தத்து எடுப்பவர்களுக்கு இந்த சலுகை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Sikkim govt announce 2 more baby job promotion