வகுப்பறையில் மாணவனை தூக்கிப்போட்டு உதைத்த ஆசிரியர்! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்! - Seithipunal
Seithipunal


அகமதாபாத்தில் ஒரு பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் ஒரு மாணவனை தாக்கியதாக பரவலாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் வத்வாவில் உள்ள தனியார் பள்ளியில் கணிதம் கற்பித்த அபிஷேக் படேல் என்ற ஆசிரியர் இடையில் அந்த மாணவரிடம் பாடம் தொடர்பாக கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. இதற்க்கு மாணவர் உளறிய நிலையில், ஆத்திரம் அடைந்த ஆசிரியர் அந்த மாணவனின் கையை முறுக்கி, தலைமுடியை பிடித்து இழுத்து, மாணவர்கள் முன்னிலையில் கன்னத்தில் பலமுறை அடித்து தள்ளினார். இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வகுப்பறையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை காண்பித்த நிலையில், வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவுவதற்கு பிறகு, மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அங்கு அபிஷேக் படேலை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தனர். 

இதனையடுத்து, காவல்துறையினர் அபிஷேக் படேலை கைது செய்து, அவர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம், கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் ஆசிரியர்களின் நடத்தை பற்றிய அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வாறு, சமூகத்தில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், கல்வி நிலையங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மேலும் தீவிரமாக ஆராய வேண்டும் என்பதற்கான தேவை உணரப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School teacher arrested in Ahmedabad Video of assaulting student goes viral


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->