கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இவர்களுக்கும் இட ஒதுக்கீடு.? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கேரளாவைச் சேர்ந்த திருநங்கை சுபி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் "இந்திய அரசியலமைப்புச் சட்டம் 16வது பிரிவின் கீழ் இட ஒதுக்கீட்டை பெற மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிமை உண்டு. மூன்றாம் பாலினத்தவருக்கு போதிய பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திறன் திட்டங்கள் இல்லாததால் ஒடுக்கப்பட்ட எங்களுக்கு கணிசமான அளவு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. 

அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019ன் படி பல்வேறு உரிமைகள் மூன்றாம் பாலினத்தவருக்கு வழங்கப்பட்டாலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. எனவே கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. திருநங்கை சுபி அவர்கள் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகவும், மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC directs Central and State Govts to respond reservation for transgender


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->