மனைவியிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்.! பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அளித்த கணவர்.! - Seithipunal
Seithipunal


கணவனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்படும் பெண்களுக்கு சமூகம் மற்றும் சட்டத்தில் பல வகையான பாதுகாப்பு உள்ளது. ஆனால் மனைவியால் கஷ்டப்படும் கணவர்களுக்கு நியாயம் வேண்டும் என்று, 'மனைவியிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்' என பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார் ஒரு கணவர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த யதுநந்தன் ஆச்சார்யா என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் மனைவிக்கு எதிராக தனது குறைகளை பிரதமர் அலுவலகம், பெங்களூரு நகர போலிஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜு ஆகியோருக்கும் ட்விட்டர் மூலம் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக யதுநந்தன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், யாராவது எனக்கு உதவுவார்களா? அல்லது இது நடந்தபோது யாராவது எனக்கு உதவி செய்தார்களா? இல்லை. ஏனென்றால் நான் ஒரு மனிதன்! என் மனைவி என்னை கத்தியால் தாக்கினாள். இது தான் நரி சக்தியா? இதற்காக அவள் மீது குடும்ப வன்முறை வழக்கு போடலாமா? என்றார். மேலும் மனைவியால் கத்தியால் குத்தப்பட்டதில் தனது கையில் இருந்து ரத்தம் கொட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இவரது ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்த பெங்களூரு போலீஸ் கமிஷனர், உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும், நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Save me from my wife The husband complained to the PM office


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->