சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேல், 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு அனுமதியில்லை - தேவசம் போர்டு அதிரடி! - Seithipunal
Seithipunal


சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு மேல், 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு அனுமதியில்லை என்று, தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சபரிமலையில் பெண்களை அனுமதித்தால், கோயிலின் ஐதீகம் பாதிக்கப்படும் என்று தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளா மாநிலத்தின் புகழ்பெற்ற இந்து கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று, கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

சபரிமலையில் பெண்களை அனுமதித்தால், கோயிலின் ஐதீகம் பாதிக்கப்படும் என்று தீர்ப்புக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்றதால், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதில் கேரள அரசு தயக்கம் காட்டியது.

இந்நிலையில், இந்த வருடம் மண்டல பூஜைக்கு நடை திறக்கப்பட்டு, போலீசாருக்கு வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறை புத்தகத்தில், 2018 நீதிமன்றம் தீர்ப்பின்படி அனைத்து பக்தர்களையும் ஐயப்ப தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது மீண்டும் ஐயப்ப பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, தவறுதலாக அச்சிடப்பட்டு இந்த வழிகாட்டி நெறிமுறை வழங்கப்பட்டதாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார். 

மேலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 வயதுக்கு கீழும் 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Savarimala Aiyyappan Temple 2022


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->