அரசு பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன்..மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மாணவர்களுக்கு அறிவுரை! - Seithipunal
Seithipunal


நான் அரசு பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன் எனவும் நீங்களும் யூ.பி.எஸ்.சி தேர்விற்கு தயாராகி ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு வர முயற்சிக்க வேண்டும் எனவும் இதற்கு கடின உழைப்பு மிகவும் அவசியம் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் கேட்டுக் கொண்டார்கள். 

மத்திய அரசால் 2015-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட "பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ" என்ற திட்டத்தின் பத்தாம் ஆண்டு நிறைவைத் தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம்  "பெண் குழந்தையை காப்பாற்றவும், பெண் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி அளிப்பதுவும், பெண் சிசு கொலையை தடுப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

 இது மத்திய அரசால் மகளிர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய நோக்கம் கொண்டது. இதன் தொடர் நிகழ்வாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பாக இரண்டாம் நாளான இன்று லாஸ்பேட்டையில் அமைந்துள்ள அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து சுமார் 80-க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவிகள் இன்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். 

இந்நிகழ்விற்கு தலைமையேற்று துவக்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள். மேலும் இத்துறை மூலம் வருவாய் சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களும் மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படுகிறது எனவும் கூறினார்கள். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து பணிகள் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்கள். 

இதன் மூலம் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து மாணவிகள் எளிதாகப் புரிந்து கொள்ள இந்நிகழ்வு இவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. மேலும் மகளிருக்கு உண்டான திட்டங்கள் குறித்தும் மேற்க்கல்வி பயில்வதற்கான படிப்புகள் குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் கேட்டறிந்தார்கள். மாவட்ட ஆட்சியர் மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். மேலும் ஒரு மாணவியின் கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறுகையில் நான் அரசு பள்ளியில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன் எனவும் நீங்களும் யூ.பி.எஸ்.சி தேர்விற்கு தயாராகி ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு வர முயற்சிக்க வேண்டும் எனவும் இதற்கு கடின உழைப்பு மிகவும் அவசியம் எனவும் கேட்டுக் கொண்டார்கள். இதன் மூலம் சமுதாயத்தில் நீங்கள் ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் ஆட்சியர் அவர்கள் மாணவிகளை கேட்டு.கொண்டார்கள்.

மேலும் இதன் தொடர் நிகழ்வாக "மிஷன் சக்தி" மற்றும் "ஒருங்கிணைந்த சேவை மையம்" மேலும் "சக்தி சதான்" மற்றும் பணிக்குச் செல்லும் பெண்கள் விடுதி மேலும் 181 பெண்களுக்கான இலவச உதவி எண் மற்றும் 1098 குழந்தைகளுக்கான இலவச உதவி எண்கள் போன்றவை பற்றிய விழிப்புணர்வுகளும் மாணவிகளுக்கு மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I studied in a government school and succeeded in the IAS exam District Collector Kulothungan gives advice to the students


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->