பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வழக்கில் தீர்ப்பு! பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு நிவாரணம் எவ்வளவு?!
Pollachi case judgement details
பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி நந்தினி தேவி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது அவர்களுக்கு சாகும்வரை ஆயுள் தணடனை வழங்கப்படும் என்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
Pollachi case judgement details