பிரதமர் மோடியுடன் டிரம்ப் குறித்து பேசிய ரஷிய அதிபர் புதின்!
Russian President Putin spoke about Trump with Prime Minister Modi
பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். தொலைபேசி மூலம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தது குறித்து பிரதமர் மோடியிடம் ரஷிய அதிபர் புதின் பேசினார்.
உக்ரைன், ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.இதையடுத்து போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க முயற்சித்து வருகிறது.இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் கடந்த 15ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து , அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். தொலைபேசி மூலம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன்-ரஷியா போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தது குறித்து பிரதமர் மோடியிடம் ரஷிய அதிபர் புதின் பேசினார்.
அப்போது உக்ரைன் விவகாரத்தில் அமைதியான தீர்வு எட்ட வேண்டும் என புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.இதையடுத்து என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து பேசிய எனது நண்பரான ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் போருக்கு அமைதியான முறையில் தீர்வுகாண இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கான அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். நமது தொடர்ச்சியான பேச்சுவார்த்தை, பரிமாற்றம் வரும் நாட்களில் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
English Summary
Russian President Putin spoke about Trump with Prime Minister Modi