ராஜஸ்தான் தேர்தல்: வாக்குறுதிகளை வாரி தெளித்த கார்கே! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மல்லிகார்ஜுன கார்கே இன்று, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்ட 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். 

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வருகின்ற 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ.க இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 

இந்த 2 கட்சிகளும் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று 7 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார். 

அதன்படி, கிருஷலட்சுமி திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் ஆண்டுதோறும் ரூ. 10000 வழங்கப்படும். முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.  

சமையல் எரிவாயு ரூ. 500க்கு வழங்கப்படும் உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை அறிவித்தார். காங்கிரஸ் அரசு உருவாக்கிய மிகப்பெரிய அணைகள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை பா.ஜ.க சிதைத்து வருகிறது என தெரிவித்துள்ளார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது எதிர்க்கட்சியான பா.ஜ.க 73 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajasthan Election Gharke Announces  Promises 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->