40 வயது பெண்மணி மூவரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்புகையில் அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் 40 வயதுடைய பெண்மணி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில், மூன்று இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் 40 வயது பெண்ணை, அப்பகுதியை சார்ந்த மூன்று இளைஞர்கள் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், பாதிக்கப்பட்ட பெண்மணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக பணியின் காரணமாக அஃனுள்ள சவாரி மாதேபுர் பகுதிக்கு வந்ததும், ஊரடங்கின் காரணமாக இங்கு சிக்கியதும் தெரியவந்துள்ளது. இவர்கள் தங்கும் இடத்தில் உணவு மற்றும் தங்குமிட பிரச்சனை நெருக்கடி ஏற்பட்டதால், சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவெடுத்துள்ளார். 

இதன்படி நடந்து சென்று கொண்டு இருக்கும் போது அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஓய்வெடுத்த நிலையில், அங்கு வந்த மூன்று இளைஞர்களால் பெண்மணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், பெண் உதவிக்கு குரல் எழுப்பியும் யாரும் வரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த புகாரின் அடிப்படையில், அப்பகுதியை சார்ந்த ரிஷிகேஷ், லகான் ரீகர் மற்றும் கமல் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்மணியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajasthan 40 year girl rapped in school campus during corona amid


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->