ராகுல்காந்தி அவதூறு வழக்கு! எதிர்தரப்புக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


மோடி சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ராகுல் காந்தி மீது, மோடி சமூகத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ., அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தொடர்ந்து ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியும் தகுதிநீக்கமானது.

இதனையடுத்து ராகுல்காந்தி அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு மனுவையும் சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது.

தொடர்ந்து, தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து, அவரின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்தும், தண்டனையை நிறுத்தி வைக்ககோரியும், தனக்கு இடைக்கால நிவாரணம் கோரியும்  உச்ச நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராகுல்காந்தியின் மனுவுக்கு பதிலளிக்க எதிர்தரப்பினர் கால அவகாசம் கோரினர்.

இதனையடுத்து அவதூறு வழக்கு தொடர்ந்த பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட இரு எதிர்தரப்பினருக்கு 10 நாள் காலா அவகாசம் வழங்கி, வழக்கை வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi Defamation Case SC Order


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->