ராகுல் காந்தி வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதியை வெளியிட்ட உ.பி. காங்கிரஸ் தலைவர்! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தி வரும் மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார். 

அதேபோல் வாரணாசியில் இருந்து பிரியங்கா காந்தி போட்டியிட முடிவு செய்தால் அவருக்கு காங்கிரசின் ஒவ்வொரு தொண்டரும் ஒத்துழைப்பார்கள் என்று தெரிவித்தார்.

முன்னதாக வாரணாசியில் உ.பி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அஜய் ராய்க்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வர வேற்பளித்தனர். 

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, பா.ஜ.கவுக்கு எதிராக பிரதமர் மோடி வாரணாசியில் தொடங்கிய அரசியல் போட்டி மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

பிரதமருக்கு எதிராக கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தலைவர் பதவி வழங்கப்பட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் தெரிவித்திருப்பதாவது, ''ராகுல் காந்தியின் சிப்பாய் நான் அதனால்தான் எனக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது. 

இது என்னுடைய தொடர் போராட்டத்துக்கான வெற்றி ஆகும். பாஜகவின் பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால் என் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்தன.

அனைத்தையும் கடந்து தற்போது ராகுல் காந்தியின் சிப்பாயாக இன்று பதவிக்கு வந்துள்ளேன். இனி உ.பி.யின் கிழக்கே உள்ள சண்டவுலி முதல் மேற்கே உள்ள காசியாபாத் வரை காங்கிரஸ் தொண்டர்கள் பா.ஜ.கவுக்கு எதிராக என்னுடன் இணைந்து போராடுவார்கள்'' என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi announced the constituency Lok Sabha elections


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->