சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு 5 செருப்படி.!! எங்குத் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு 5 செருப்படி.!! எங்குத் தெரியுமா?

சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷஹதோல் மாவட்டம் நாகநாடுயி கிராமத்தில், கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிந்தால், அதன் உரிமையாளருக்கு 5 செருப்படிகள் மற்றும் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று தண்டோரா போட்டு கிராம பஞ்சாயத்து அறிவித்துள்ளது.

இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், கிராம மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் தண்டோரா வாசித்துக் கொண்டே அறிவிப்பு செய்கின்றனர். 

கிராமத்தில் கால்நடைகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது கண்டறியப்பட்டால், ஐந்து முறை செருப்பால் அடித்து, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கிராம மக்களிடம் கூறுவது வீடியோவில் உள்ளது

இந்த உத்தரவு தங்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

punishment to owners in madhya pradesh for cattle found roaming on road


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->