எம்எல்ஏ., மீது வழக்கு! காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்! - Seithipunal
Seithipunal


 புதுச்சேரி நகரப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்ற குற்றம் சாட்டிய சுயேச்சை எம்எல்ஏ நேரு, ஸ்மார்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியில் பல்வேறு ஊழல் நடைபெறுவதாகவும் விமர்சித்து நேற்றைய தினம் புதுச்சேரி தலைமைச் செயலக அலுவலகத்தில், அவரின் ஆதரவாளர்கள் 50 பேருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து தலைமைச் செயலரை சந்திக்க சுயேச்சை எம்எல்ஏ நேரம் கேட்டபோது, தலைமைச் செயலர் எம்எல்ஏவை சந்திக்காமல், முதல்வர் ரங்கசாமியின் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இது குறித்த தகவல் அறிந்து வந்த எம்எல்ஏ நேரு, இந்த அரசு நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கு செல்ல, நுழைவாயிலின் கதவை ஏறி கொதித்து தாண்டி உள்ளே சென்றனர்.

இந்த நிலையில், எம்எல்ஏ நேரு மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 10 பேர் மீது, பெரிய கடை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், சுயேட்சை எம்எல்ஏ-வை தடுக்க தவறியதாக ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கண்ணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உருளையான்பேட்டை ஆய்வாளர் பாபுஜி  கூடுதல் பொறுப்பு கவனிப்பார் என்றும் புதுச்சேரி காவல் தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry MLA case june


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->