ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தற்போது, புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதாலும், இறப்பு விகிதம் உயர்வதாலும், கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறும் ஆபத்து உள்ளதாக சமூக ஜனநாயக இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் ஊரடங்கை கடுமையாக்க வலுயுறுத்தி வருகின்றனர். 

புதுச்சேரியில் இன்று 323 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 21,428 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் 431 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதால் ஊரடங்கை கடுமையாக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதுச்சேரியில் ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும். ஊரடங்கை கடுமையாக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry lockdown case


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal