அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாலுடன் பிஸ்கெட், பழம் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலையில் பாலுடன் பிஸ்கெட், பழமும், மாலை நேரத்தில் சிறுதானிய உணவும் வழங்கப்படும் என்று, முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் சார்பில் நடந்த ஆசிரியர் தின நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "புதுச்சேரி அரசின் காலை உணவு திட்டத்தில் பாலோடு, பிஸ்கெட், பழமும் விரைவில் வழங்கப்படும். 

மாலையில் மாணவர்கள் பள்ளி விட்டு செல்லும்போது சிறுதானிய உணவும் வழங்கப்படும். 

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறந்த பயிற்சி அளித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற வைத்துள்ளனர். 

மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு மூலம் 37 அரசு பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

பிற மருத்துவ கல்வியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்கும். புதுச்சேரி அரசின் கல்விக்கு திட்டங்களை மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Govt School Morning foods announce


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->