படையெடுத்து வரும் வெட்டிக்கிளி கூட்டங்கள்.. கடும் பஞ்சத்தில் தவிக்கும் விவசாயிகள்..!  - Seithipunal
Seithipunal


கடந்த சில மாதங்களாகவே உலகளவில் வெட்டுக்கிளி தாக்குதல் அதிகளவில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் பயிரிட்டு விளைச்சலுக்காக காத்திருக்கும் நேரத்தில் வெட்டுக்கிளிகள் பெருமளவு பயிர்களை சேதப்படுத்துகிறது. 

முதலில் இந்த பிரச்சனையானது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்த நிலையில், இந்தியாவின் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கென்யா நாட்டில் 70 வருடத்தில் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யா நாட்டில் இருக்கும் விவசாய நிலங்களை கடந்த 70 வருடத்திற்கு இல்லாத அளவு வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளது. 

இந்த தாக்குதல் அங்குள்ள கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாட்டில் இருந்து வந்துள்ள வெட்டுக்கிளிகளால் அரங்கேறி, விவசாய நிலத்தினை அழித்து பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே கடுமையான பஞ்சத்தில் தவித்து வரும் நிலையில், தற்போது பஞ்சம் மேலும் அதிகரித்துள்ளதாகவும், வெட்டுக்கிளி தாக்குதலால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனித விரலின் அளவுக்கு வெட்டுக்கிளிகள் இருப்பதால் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

problem for indian formers


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal