செப்டம்பர் 15-ஆம் தேதி 'படை தளபதிகள் மாநாடு': பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!
Prime Minister Modi to inaugurate Army Commanders Conference on September 15th
கோல்கட்டாவில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி படைத்தளபதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை பிரதமர் மோடி, தொடங்கி வைக்கவுள்ளார். குறித்த மாநாடு செப்டம்பர் 15 முதல் 17-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருளாக 'எதிர்கால மாற்றம், சீர்திருத்தங்கள் மற்றும் தயார் நிலை' ஆகியவை இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறித்த மாநாட்டில், பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை அதிகாரிகள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பிறதுறை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
English Summary
Prime Minister Modi to inaugurate Army Commanders Conference on September 15th