பெரும் அதிர்ச்சி! ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு! இந்திய வீரர்கள் இருவர் வீரமரணம்! 
                                    
                                    
                                   Jammu and Kashmir terrorists attack Army 
 
                                 
                               
                                
                                      
                                            ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கட்கிழமை பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ராணுவத்தின் இரு வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குல்காமின் குட்டர் காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தேடுதல் நடவடிக்கை தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர்.
சில மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சூட்டில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், ராணுவத்தின் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோதல் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. அப்பகுதியில் கூடுதல் படைகள் நியமிக்கப்பட்டு, மீதமுள்ள பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு ஒழிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Jammu and Kashmir terrorists attack Army