தமிழக பாஜக புள்ளி திடீர் கைது! திராவிட மாடலின் திருட்டுத்தனங்களை வெளிப்படுத்துவோம் - கொந்தளிக்கும் நயினார்!
BJP syed ibrahim arrest Nayinar condemn DMK
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "காரணமின்றி திரு. சையது இப்ராகிம் அவர்களைக் கைது செய்யும் திமுக அரசுக்கு கண்டனம்!
கிட்னி தானம் குறித்த வழிகாட்டுதல்களை அறிந்துகொள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்ற நமது பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் சையது இப்ராகிம் அவர்களை எந்தவொரு சரியான முகாந்திரமுமின்றி திமுக அரசு கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது.
இது ஒன்றும் முதல்முறையல்ல. சகோதரர் திரு. சையது இப்ராகிம் அவர்களை எந்தவொரு காரணமுமின்றி தொடர்ந்து ஏவல்துறையினர் கைது செய்து முடக்க முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால், காவல்துறையைக் கைப்பாவையாய் கொண்டு, அடக்கப்பார்க்கும் திமுக அரசுக்கு தாமரை சொந்தங்கள் என்றும் அஞ்ச மாட்டோம்!
வழக்குகளையும் கைவிலங்குகளையும் கண்டு அஞ்சாது, திராவிட மாடலின் திருட்டுத்தனங்களை வெளிப்படுத்துவோம்! திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP syed ibrahim arrest Nayinar condemn DMK