விமானப்படை வீரர்களை சந்தித்த பிரதமர் மோடி...! - AFS ஆதம்பூர்
Prime Minister Modi meets Air Force personnel AFS Adampur
நமது ராணுவ வீரர்கள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தின்போது பணியாற்றிய விதம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த போர் பதற்றம் ஓய்ந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஜலந்தரிலுள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு வருகை தந்தார்.அங்கு விமான படை வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி:
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டதாவது,"இன்று காலை, நான் AFS ஆதம்பூருக்குச் சென்று நமது துணிச்சலான விமான வீரர்கள் மற்றும் வீரர்களைச் சந்தித்தேன். துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது.
நமது நாட்டிற்காக நமது ஆயுதப் படைகள் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.இது தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
Prime Minister Modi meets Air Force personnel AFS Adampur