ஜவுளி தொழில் தேக்கம் : நாமக்கல்லில் விசைத்தறி கூடங்கள் மூடல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் நாட்டில் விவசாயத்திற்கு அடுத்ததாக மிக முக்கிய தொழிலாக இருப்பது ஜவுளி தொழில். இந்தத் தொழிலை நம்பி தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் விசைத்தறி மிக முக்கிய தொழிலாக உள்ளது. 

இதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையத்தில் மட்டும் 50,000 குடும்பத்திற்கு மேற்பட்டவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நூல் விலை ஏற்ற, இறக்கமாக இருப்பதால் விசைத்தறியில் உற்பத்தியாகும் ஜவுளிகள் தேங்கியுள்ளன. 

இதன் காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதனால் விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிபாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி கூறுகையில், 

"தீபாவளிக்கு பிறகு தொழில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. விற்பனை மந்தம், உற்பத்தி பாதிப்பு மற்றும் ஜவுளிகள் தேக்கம் உள்ளிட்ட காரணங்களால்  தொழில் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து உற்பத்தி நடைபெற்றாலும் தொழில் சரிவு நிலையில் தான் உள்ளது. 

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை காலத்தில் மூன்று நாள் விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால், தற்போது தொழில் உள்ள சூழ்நிலை கருதி பொங்கலுக்கு 10 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

power looms close ten days in namakkal pallipalaiyam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->