தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் 12ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அதிவேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. 

நாட்டில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் கர்நாடகா உள்ளது. கர்நாடகாவில் அதிகபட்சமாக 44 ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சூரியநாராயணன் சுரேஷ் குமார் கூறியதாவது, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றனர். பதினோராம் வகுப்பு மாணவர்களை நேரடியாக பன்னிரண்டாம் வகுப்பிற்கு தர முடிவு செய்துள்ளோம். 

கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு ஆசிரியர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றலாம் எனத் தெரிவித்துள்ளார். இரண்டாம் ஆண்டுக்கான பல்கலைக் கழக தேர்வுகள் தள்ளி வைப்பது என கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா பாதிப்புகளில் இருந்து மாணவர்களை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

postponement of 12 exam in karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->