பாண்டிச்சேரி: கொத்தடிமையாக வைக்கப்பட்டு, சிறுமிகள் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாகிய விவகாரம்.. அதிகாரிகள் நம்பிக்கை.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கீழ்ச்சாத்தமங்கலம் பகுதியை சார்ந்தவர் கன்னியப்பன் (வயது 53). இவர் கோர்காடு பகுதியில் வாத்துப்பண்ணை நடத்தி வந்த நிலையில், இங்கு கொத்தடிமைகளாக 5 சிறுமிகள் இருப்பதாக தகவல் வெளியானது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், போதைப்பொருள் கொடுத்து சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது உறுதியானது. 

இதனையடுத்து மங்களம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார் (வயது 27), உறவினர் பசுபதி, ஐயனார் (வயது 23), சிவா, மூர்த்தி ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர் கண்ணியப்பனின் இளையமகன் சரத்குமார் (வயது 22) மற்றும் அவரது 15 வயது தம்பியும் கைது செய்யப்பட்டனர். 

இந்த விஷயம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பண்ணை, உரிமையாளரின் வீடு என பல்வேறு இடங்களையும் அதிகாரிகள் பார்வையிட்டு சோதனை செய்தனர்.

இந்த சிறுமிகள் வந்தவாசியை சார்ந்தவர்களாக இருந்து வந்த நிலையில், ரூ.3 ஆயிரத்திற்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்யப்பட்டதும் அம்பலாகியுள்ளது. இந்த விசாரணையில் மேலும் பலர் கைதாகலாம் என்றும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக பேசிய குழந்தைகள் நல அதிகாரி, கைதாகியுள்ள 8 பேரை தவித்து, இன்னும் பலர் இவ்வழக்கில் சிக்கலாம். இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். புதுச்சேரியில் இனியும் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry child girl sexual abuse issue Child welfare Officer


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal