இப்படியும் மோசடி செய்ய முடியுமா..? உத்தரபிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி கோடிகளில் சம்பாதித்த நபர்: அதிர்ச்சியில் போலீசார்..!
Police in Uttar Pradesh have arrested a man who earned crores by running a fake embassy
உத்தரபிரதேசத்தில் காசியாபாத்தின் கவி நகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து போலி தூதரக அலுவலகத்தை நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவரை காசியாபாத் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது;
போலி தூதரக அலுவலகத்தை நடத்திவந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவரும் அதே பகுதியில் தான் வசித்து வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இவர் வெஸ்டார்டிகா, சபோர்கா, பவுல்வியா, லண்டனியா என்ற யாருக்கும் பெயர் தெரியாத நாடுகளின் தூதராக இருப்பதாக நடித்து தூதரகத்தை நடத்திய வந்துள்ளார்.
அத்துடன், இதற்காக மேலும், சொகுசு கார்களிலும் தூதர அதிகாரிகள் பயன்படுத்தும் நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தியுள்ளார். மேலும், பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் இருப்பது போன்று போட்டோக்களை மார்பிங் செய்து வைத்துள்ளார்.

குறித்த அவரிடம் இருந்து ரூ.44 லட்சம் ரொக்கம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் நம்பர் பிளேட்டுடன் கூடிய 4 கார்கள், பாஸ்போர்ட்கள், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சீலுடன் கூடிய போலி ஆவணங்கள், போலி பான் கார்டுகள், பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் 34 போலி சீல் கட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவதாக கூறியும், போலி நிறுவனங்கள் மூலம் ஹவாலா பரிமாற்றம் செய்தும் மக்களை ஏமாற்றி ஹர்ஷ்வர்தன் ஜெயின் சம்பாதித்து வந்துள்ளார். இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் காசியாபாத்தின் கவி நகர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
English Summary
Police in Uttar Pradesh have arrested a man who earned crores by running a fake embassy