தமிழ் மொழி இந்தியர்களின் மொழி - பிரதமர் மோடி.!
PM Modi speech about Tamil language
தமிழ் மொழி மூத்த மொழி என்றும் இந்தியர்களின் மொழி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளையும் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி என்று டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார்.
இந்தியா திரும்பிய பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது விமான நிலையத்தில் பேசிய பிரதமர் மோடி தமிழ் மொழி நம்முடைய மொழி என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகிலேயே மிகவும் மூத்த மொழி தமிழ் மொழி தான் என்றும் தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியருடைய மொழி எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக பப்புவா நியூ கினியா நாட்டில் அந்நாட்டு மொழியில் பேசப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.
English Summary
PM Modi speech about Tamil language