காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி என்ன ஆனார்? - பிரதமர் மோடியின் நறுக் கேள்வி!
PM Modi Say about Aadhi ranjan Congress mp
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
அவரின் உரையில் "இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உள்ள சில விஷயங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத, பார்த்திராத, கற்பனையில் கூட நினைக்காத அளவுக்கு விசித்திரமானவை.

காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி என்ன ஆனார்? அவரது கட்சி அவருக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை. அவர்களது நேரம் முடிவடைந்த போதும் இன்று அவரை பேச அனுமதிக்காதது உங்கள் தன்மை.
உங்கள் (காங்கிரஸ்) நிர்ப்பந்தம் என்னவென்று தெரியவில்லை, ஏன் ஆதிர் ஒதுக்கி வைத்தார்கள். கொல்கத்தாவில் இருந்து ஒரு போன் வந்திருக்கலாம், காங்கிரஸ் அவரை மீண்டும் மீண்டும் அவமதிக்கிறது.

நாங்கள் இந்தியாவின் நற்பெயரை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளோம், ஆனால் உலகில் நம் நாட்டின் நற்பெயரைக் கெடுக்க சிலர் (ராகுல்காந்தி) முயற்சி செய்கிறார்கள். இன்று இந்தியாவின் மீது உலகத்தின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது" என்று பிரதமர் மோடி பேசினார்.
English Summary
PM Modi Say about Aadhi ranjan Congress mp