ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் || தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்.! பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் தென் கிழக்கே உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கிலோ மீட்டர் தொலைவிலும், 51 கிலோ மீட்டர் ஆழத்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும், மிகமோசமான காலகட்டங்களில் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா துணையாக இருப்பதாகவும், தேவையான அனைத்து நிவாரணப் பொருட்களையும் வழங்க தயாராக உள்ளதாகவும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm modi said ready to do all necessary assistance to Afghanistan earthquake


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->