ஓட்டுத் திருட்டு புகார் அரசியல் கோஷம்: 'இந்தியாவில் தேர்தல்கள் நேர்மையாக நடக்கிறது, கடந்த கால வரலாறு இதனை நிரூபிக்கும்.': முன்னாள் தேர்தல் ஆணையாளர்கள் உறுதி..!
Past history will prove that elections in India are fair say former election commissioners
இந்தியாவில் லோக்சபா தேர்தல் மற்றும் மஹாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓட்டுகள் திருடப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை தேர்தல் ஆணையகம் மறுத்துள்ளது. ஆனாலும், ராகுல் தனது குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், ''இந்தியாவில் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்கின்றன,'' என முன்னாள் தேர்தல் ஆணையாளர்களான எஸ்ஓய் குரேஷி, ஓபி ராவத் மற்றும் அசோக் லவாசா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஓட்டு திருட்டு குறித்து உண்மை தன்மை இருக்கும் எனில் அது குறித்து பிரமாணப்பத்திரத்தில் ராகுல் கையெழுத்து போட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் தேர்தல் ஆணையாளர்களான எஸ்ஓய் குரேஷி, ஓபி ராவத் மற்றும் அசோக் லவாசா ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் போது 'இந்தியாவின் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்கின்றன'' என்று தெரிவித்துள்ளனர்.

அசோக் லவாசா (2018 முதல் 2020-ஆம் ஆண்டு வரை தேர்தல் ஆணையராக பணியாற்றியவர்)
இந்தியாவில் தேர்தல்கள் நேர்மையாக நடக்கிறது என கருதுவதாகவும், கடந்த கால வரலாறு இதனை நிரூபிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஓட்டுத் திருட்டு என்பது தேர்தலுக்காக எழுப்பப்படும் கோஷம் என்றும், யாருக்கு யார் ஓட்டுப் போட்டார்கள் என தெரியாத போது, இந்த குற்றச்சாட்டை எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
ஓபி ராவத் (2015 முதல் 2018 வரை தேர்தல் ஆணையராகவும், 2018 ஜனவரி 21 முதல் டிசம்பர் 01 வரை தலைமை தேர்தல் ஆணையராகவும் பணியாற்றியவர்)
அரசியல் மோதல்களைத் தவிர்ப்பதற்கு தேர்தல் என்பது பொதுவான வழி. தேர்தலின் போது எதுவும் நடக்காது. அனைத்தும் சுமூகமாக நடக்கும் என எதிர்பார்ப்பது அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்தியத் தேர்தல்கள் தங்கத்தின் தரம் போல் கருதப்படுகிறது எனவும், மிகவும், நேர்மையான , சுதந்திரமான மற்றும் நம்பகத்தன்மையான தேர்தல்கள் ஒன்றாக இந்தியாவின் தேர்தல்கள் உலகின் பெரும்பான்மையான ஜனநாயகங்களால் பாராட்டப்படுகிறது என்று கூறியுள்ளார்.

எஸ்ஓய் குரேஷி (2010 முதல் 2012-ஆம் ஆண்டு வரை தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றியவர்)
ஓட்டுத் திருட்டு என்பது அரசியல் கோஷமாக பார்க்கிறேன். என்றும், நேர்மையான தேர்தல் நடத்த சுத்தமான வாக்காளர் பட்டியல் தேவை. அதேநேரத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்கள் நியாயமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தேர்தலுக்கும் மற்றும் அதன் ஒருமைப்பாட்டுக்கும் வாக்காளர் பட்டியல் தான் அடித்தளத்தை அமைக்கின்றன. வாக்காளர் பட்டியல் சுத்தமாக இருக்காத வரை, தேர்தல்களை நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், 100 கோடி வாக்காளர்களை கருத்தில் கொண்டு, பெரும்பாலான விஷயங்கள் துல்லியமாக நடக்கின்றன என்றும், சில அரசியல் பிரச்சினைகள் பெயரை கெடுக்கிறது. இதற்கு நாம் கவலைப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
English Summary
Past history will prove that elections in India are fair say former election commissioners