இந்தியாவின் மூச்சை நிறுத்துவோம் - பகிரங்கமாக எச்சரித்த பாகிஸ்தான்!
PAK warn India Sindu River water issue
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் கடும் விமர்சனமும் எச்சரிக்கையும் வெளியிட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததிலொன்று, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்ததுதான்.
இதன் காரணமாக, பாகிஸ்தானுக்கு செல்லும் துணை ஆறுகளின் நீர்வரத்து தடைப்பட்டால், அங்கு குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதைத் தொடர்ந்தே, பாகிஸ்தான் அரசியல்வாதி பிலாவல் பூட்டோ, “தண்ணீர் ஓடவில்லை என்றால், ரத்தம் ஓடும்” என கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு பல்கலைக்கழக நிகழ்வில், ராணுவ தகவல் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, "நீங்கள் எங்கள் தண்ணீரைத் தடுத்தால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்" என இந்தியாவை நேரடியாக எச்சரித்துள்ளார்.
இத்தகைய மிரட்டல், கடந்த காலங்களில் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் பேசிய கருத்துகளுடன் ஒத்துப் போகிறது. அவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
English Summary
PAK warn India Sindu River water issue