ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்! நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் திருப்பம்!
Ravi Mohan Aarthi Divorce case
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரும் மத்தியஸ்த அதிகாரியின் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு அளித்தது. அதன் பேரில் மூன்று முறை சந்திப்புகள் நடைபெற்றன.
பேச்சுவார்த்தையின் முடிவை எடுத்துக்கொள்வதற்காக இன்று இருவரும் நேரில் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
அதன்போது, ரவி மோகன் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லையெனவும், விவாகரத்தை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
மேலும், ஆர்த்தியின் 'சேர்ந்து வாழும்' கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதே நேரத்தில், ஆர்த்தி தனது பிரிவுக்காக மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் தனி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இருவரது மனுக்களும் விசாரணைக்கு ஏற்கப்பட்ட நிலையில், அவர்களிடம் பதில்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை நீதிபதி ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
English Summary
Ravi Mohan Aarthi Divorce case