போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பல்வேறு பொருளாதார தடை விதிக்கப்படும்: ஜி7 கூட்டமைப்பு எச்சரிக்கை..!
G7 warns of various economic sanctions if ceasefire agreement not accepted
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் மூன்றரை வருடங்களாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்த நிலையில், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா அதிகாரிகள் இடையே துருக்கியில் 15-ஆம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் போதும் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில், ஜி-7 கூட்டமைப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள், ரிசர்வ் வங்கி கவர்னர்கள் மாநாடு கனடாவின் அல்பெர்டா நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் போது குறிப்பாக உக்ரைனுக்கு எதிரான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ரஷியா மீது மேலும் பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க ஜி7 கூட்டமைப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
அத்துடன், ரஷியா மீது மேலும் பல்வேறு பொருளாதார தடை விதிக்கப்படும் என ஜி7 கூட்டமைப்ப்நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
G7 warns of various economic sanctions if ceasefire agreement not accepted