ஐபோன் பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி: 25 சதவீத வரி விதித்து டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை..!
Shock for iPhone users Donald Trump warns of 25 percent tax
அமெரிக்காவை சேர்ந்த பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் செல்போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவின் தேவனஹள்ளி, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் ஆலைகளை அமைத்து ஐபோன்களை தயாரித்து ஆப்பிள் நிறுவனத்திற்கு கொடுக்கின்றன. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி அதிகரிப்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விரும்பவில்லை. ஆப்பிள் தங்கள் ஆலையை இந்தியாவில் அமைப்பதை கைவிட்டு, அமெரிக்காவில் தங்கள் ஆலையை அமைக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலைதள வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்யப்பட வேண்டுமே தவிர இந்தியாவிலோ பிற நாடுகளிலோ அல்ல என்று ஆப்பிள் நிறுவன செயல் தலைவர் டிம் குக்கிடம் நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். ஆப்பிள் ஐபோன்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படவில்லை என்றால் அந்நிறுவனம் அமெரிக்காவுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும்'என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டிரம்ப்பின் எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 2.50 சதவீதம் சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Shock for iPhone users Donald Trump warns of 25 percent tax