பத்ம விருது, சாகித்ய அகாடமி விருது பெற்ற கே.எம்.சானு அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்தார்...!
Padma Award and Sahitya Akademi Award winner KM Chanu dies of ill health
கேரளா மாநிலத்தின் பிரபல மலையாள அறிஞர் ''எம்.கே.சானு'' என்பவருக்கு 98 வயதாகிறது. இவர் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் பணியில் சிறந்து விளங்கினார்.மேலும்,இவர் சமூக சிந்தனையாளரும் ஆவார். இதற்கிடையே எம்.கே.சானு வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் எர்ணாகுளத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.இந்த சூழ்நிலையில், நேற்று இயற்கை எய்தினார்.அவரது மரணத்துக்கு இலக்கியத்துறையை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஆலப்புழா மாவட்டம் 1928-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி எம்.கே.சானு அவர்கள் எம்.சி.கேசவன்- பவானி அம்மா தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
மலையாளத்தில் இருக்கும் பல முக்கியமான நபர்களின் வாழ்க்கை சரித்திரம் அனைத்தும் எம்.கே. சானுவால் எழுதப்பட்டது.அதுமட்டியுமின்றி,மலையாள மொழியின் சப்தம் என்று மலையாள அறிஞர்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார்.
மேலும் பத்ம விருது, சாகித்ய அகாடமி விருது மற்றும் பவனன் விருது, வயலார் விருது,எழுத்தச்சன் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது உடல் இன்று காலை வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை அவரது உடல் ரவிபுரம் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செலுத்தி அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
English Summary
Padma Award and Sahitya Akademi Award winner KM Chanu dies of ill health