திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதியில்லை - அதிரவைத்த ஓயோ! - Seithipunal
Seithipunal


ஹோட்டல் முன்பதிவு சேவையை வழங்கும் ஓயோ நிறுவனம், திருமணமாகாத ஜோடிகளுக்கு தங்க அனுமதி வழங்குவதை நிறுத்தும் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில், உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள பங்குதாரர் விடுதிகளில் இந்த விதிமுறை உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.  

புதிய விதிகளின்படி, ஜோடிகள் விடுதிகளுக்கு வரும்போது தங்களது உறவுமுறையை உறுதிப்படுத்தும் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். இதை நிராகரிக்க அல்லது அனுமதிக்க அதிகாரம் ஹோட்டல் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளின் பேரில், திருமணமில்லாத ஜோடிகளின் தங்குமிடம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து ஓயோ நிறுவனத்தின் வட இந்தியா தலைவர் பவாஸ் சர்மா தெரிவிக்கையில், “விருந்தோம்பல் நடைமுறைகளைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் செயல்படுத்த நாங்கள் உறுதியாக உள்ளோம். சமூகத்தின் மதிப்புகளுக்கும், சட்டத்திற்கும் இணங்க எங்கள் கொள்கைகளை மாற்றி அமைக்கிறோம்” என்றார்.  

மேலும், பாதுகாப்பான விடுதி அனுபவத்தை வழங்கும் நோக்கில் காவல்துறை மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றவும், அங்கீகாரமற்ற விடுதிகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓயோ தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

oyo announce hottal room bokking marraige certificate


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->