கேரளாவில் தொடரும் கனமழை.! 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.!
Orange alert for 8 districts due to continuing heavy rains in Kerala
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எர்ணாகுளம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் கொச்சி நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், மழையினால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய தீயணைப்புத்துறை, மின் துறை மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Orange alert for 8 districts due to continuing heavy rains in Kerala