பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி, 16 மாணவர்கள் படுகாயம்..!!
One killed, 16 students injured in bus accident
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மத்திய பிரதேச மாநிலம் சாகரில் உள்ள ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகத்திற்கு களப்பயணத்திற்காக சென்றனர்.
கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து நேற்று மாலை கட்னி நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது பன்னா மாவட்டத்தில் உள்ள குவாகேடா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்து உதவியாளர் உயிரிழந்த நிலையில் பயணம் செய்த 32 மாணவர்களில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் ராயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இரண்டு மாணவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக ஜபல்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
One killed, 16 students injured in bus accident