கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணை வீட்டிற்குள் வைத்து கொளுத்திய கும்பல்..! - Seithipunal
Seithipunal


தீப்பிடித்த வீட்டிற்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த கல்லூரி மாணவி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் பகுதியில் உள்ள வீட்டில் பெண்மணி வாடகைக்கு குடியிருந்து உள்ளார். இந்நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அந்த பெண்மணி குடியிருந்த வீட்டை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். 

அந்தப் பெண்ணை பலமாக தாக்கி, மயக்க மருந்து செலுத்தி பின்னரும் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி கொலை முயற்சி சம்பவம் நடந்ததாக பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டும் நிலையில், அந்தப் பெண்ணிற்கு சமூக வலைதளங்களில் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்து, பின்னர் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வழக்கு விசாரணையில், நான்கு மாணவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha girl Murder Attempt in House Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal