சோகம் - மதுரவாயிலில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புலேஸ்வர் என்ற வாலிபர் சென்னை மதுரவாயலை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் கடந்த மூன்று மாதமாக தங்கி கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று கனமழை பெய்ததால் கட்டட வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. அதனை புலேஸ்வர் அகற்றுவதற்காக உயர் அழுத்த மின் மோட்டாரை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே விழுந்துள்ளார். 

இதைப்பார்த்த சக தொழிலாளர்கள் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, புலேஸ்வரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வட மாநில தொழிலாளியின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழை நீரை அகற்ற சென்றபோது மின்சாரம் தாக்கி வட மாநில கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் மதுரவாயல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

north state youth died for electric shock attack in maduravayal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->