ஒரே நாளில் நீட் பயிற்சி பெற்று வந்த 2 மாணவர்கள் தற்கொலை.!!
NEET exam training students committed suicide in rajasthan
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த 2 மாணவர்கள் நான்கு மணி நேர இடைவெளியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆஸ்கர் ஷம்பாஜி என்ற 17 வயது மாணவர் பயிற்சி மையத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வுக்காக பயிற்சி தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த அவர் இந்த பயிற்சி மையத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த 4 மணி நேரத்தில் மற்றொரு பகுதியில் செயல்பட்டு வரும் பயிற்சி மையத்தில் பீகாரரைச் சேர்ந்த ஆதஸ் ராஜ் என்ற மாணவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த 2 மாணவர்களும் தங்களின் தற்கொலை குறித்து எதையும் எழுதி வைக்காமல் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். நீட் பயிற்சி தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றதால் இருவரும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இந்த மாதத்தில் மட்டும் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் தற்போது வரை கோட்டாவில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவில் போட்டி தேர்வுகளுக்கு புகழ்பெற்ற இடமாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா விளங்குவதால் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் இதுவே மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
English Summary
NEET exam training students committed suicide in rajasthan