உ.பி : சிகிச்சைக்குச் சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பு.! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜெயின்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சோனாவத் தேவி.  கர்ப்பிணிப் பெண்ணான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை கோரக்பூர் குல்ரிஹா பகுதியில் உள்ள சத்யம் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர், மருத்துவமனை மேலாளர் ரஞ்சித் நிஷாத் என்பவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, போலீசார் நடத்திய விசாரணையில், நிஷாத் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பதும், வேறு சில மருத்துவர்களின் சான்றிதழைப் பயன்படுத்தி மருத்துவமனை நடத்தி வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. 

ஏற்கெனவே நிஷாத் இரண்டு முறை வெவ்வேறு பெயர்களில் மருத்துவமனை நடத்தி, அவை சுகாதாரத் துறையால் மூடப்பட்டது. ஆனால் நிஷாத் வேறு பெயரில் மீண்டும் மருத்துவமனையை திறந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து எஸ்எஸ்பி கவுரவ் குரோவர் தெரிவித்ததாவது, "இந்த வழக்கில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த சில ஊழியர்களின் பங்கும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்குமாறு தலைமை மருத்துவ அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் மீது குண்டர் சட்டம் சேர்க்கப்பட்டு, சொத்தை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்படும்.

மேலும், தலைமை மருத்துவ அதிகாரிக்கு பதிவுசெய்யப்பட்ட மருத்துவமனைகள், நோயறிதல் மையங்கள் மற்றும் நோயியல் மையங்கள் ஆகியவற்றைப் பற்றி ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கவும், சட்ட விரோதமான நிறுவனங்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh duplicate doctor arrested pregnent woman died in hospital


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->